[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாமல்லபுரத்தில் இந்திய கலாசார விழா நடத்துவதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

இன்று 2 போட்டி: பங்களாதேஷ் - இங்கிலாந்து, நியூசி-ஆப்கான் அணிகள் மோதல்!

world-cup-2019-england-bangladesh-newzealand-afghanistan-fight-today

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து-பங்களாதேஷ் அணிகளும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் 12 வது போட்டியில், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. நடப்பு தொடரில் இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில்  தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அடுத்த போட்டியில், பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் அணி, தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் போராடி தோற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும். 

பேட்டிங், பந்துவீச்சில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட், அடில் ரஷித் பந்துவீச்சில் மிரட்டுகிறார். 

பங்களாதேஷ் அணியும் திறமையான அணிதான். அந்த அணியில், பேட்டிங்கில் தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். பந்துவீச்சில் முஸ்தபிஷூர் ரகுமான், சைபுதீன், மெஹிடி ஹசன், மோர்டாசா ஆகியோர் மிரட்டுகின்றனர். இருந்தாலும் இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுவதால், பங்களாதேஷ் அணிக்கு இன்றைய போட்டி கடும் சவாலாக இருக்கும். 


 
இங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டான்ட்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. நடப்பு தொடரில் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

விளையாடிய இரு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான முகமது ஷாசத் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும். இருந்தாலும் சிறப்பான ஸ்பின்னர்களை கொண்ட அந்த அணி, நியூசிலாந்துக்கு குடைச்சல் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close