[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

டி காக் டைவில் வீழ்ந்த கோலி - ரோகித் ஷர்மா பொறுப்பான சதம்

quinton-de-kock-took-stunning-catch-to-dismiss-virat-kohli

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்தார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மோரிஸ் 42, டு பிளிசிஸ் 38, பெலுக்வயோ 34, ரபாடா 31, மில்லர் 31 ரன்கள் எடுத்தனர். ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, புவனேஸ்வர் குமார் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

       

இதனையடுத்து, 228 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அது ஒரு அற்புதமான கேட்ச். பெலுக்வாயோ வீசிய அந்த பந்தினை கோலி சிலிப் திசையில் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு சிலிப் திசையை நோக்கி சென்றது. டி காக் நன்றாக டைவ் அடித்து அந்த பந்தினை கேட்ச் பிடித்தார். இந்திய அணி 54 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது. 

       

பின்னர், விக்கெட் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா நிதானமாக நின்று விளையாடினார். அவருக்கு கே.எல்.ராகுல் ஒத்துழைப்பு அளித்தார். தொடக்கத்தில் மிகவும் பொறுமையாக ரோகித் விளையாடினாலும், பின்னர் அடித்து விளையாட ஆரம்பித்தார். 70 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். நிதானமாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 26 (42) ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்தது. 

     

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 128 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. தோனி 28 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close