[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்
  • BREAKING-NEWS என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி; ‘ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி - ரஜினிகாந்த்

உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்!

shakib-mustafizur-mushfiqur-beat-south-africa

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில், தென்னாப்பி ரிக்கா - பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்த போட்டி, இம்ரான் தாஹிருக்கு 100 வது போட்டி. பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், சவும்யா சர்கார் களம் இறங்கினர். இதில் இக்பால் நிதானமாக விளையாட, சர்கார் அதிரடியாக ரன்களை சேர்த்தார். நெகிடி, ரபாடாவால் இவர்களது விக்கெட்டை எடுக்க முடியவில்லை.

 பின்னர், பெலுக்வயோ வந்தார். அவரது பந்து வீச்சில் இக்பால் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சர்கார், 30 பந்தில் 42 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.  பங்களாதேஷ் அணி 11.4 ஓவரில் 75 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதனால், அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், ஷகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சிறப்பாக விளையாடி அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்களது விக்கெட்டை தென்னாப்பிரிக்க வீரர்களால் வீழ்த்த முடியவில்லை. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தால், பங்களாதேஷ் அணி 31.6 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. தொடர்ச்சியாக 6 ரன் என்ற ரன் ரேட்டை தக்க வைத்தனர். அதனால், நிச்சயம் அந்த அணி 300 ரன்களை கடக்கும் என்பது உறுதியானது.

இந்த ஜோடியை இம்ரான் தாஹிர் பிரித்தார். அவரது பந்துவீச்சில் ஷகிப் அல் ஹாசன் 75 ரன்னில் போல்டு ஆகி வெளியேறி னார். அடுத்து களமிறங்கிய மிதுன் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து தாஹிர் பந்துவீச்சில் போல்டு ஆனார். முஷ்பிகுர் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் 80 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் மஹ்முத்துல்லா 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மொசடேக் 20 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து அசத்தியது. இது, பங்களாதேஷ் அணியின் அதிகப்பட்ச ஸ்கோர். 

தென்னாப்பிரிக்கா தரப்பில், பெலுக்வாயா, மோரிஸ், தாஹிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நிகிடி, 4 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் தசை பிடிப்பு காரணமாக பந்துவீசவில்லை. மிரட்டல் பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

பின்னர் 331 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக்கும் மார்க்ரமும் களமிறங்கினர். டிகாக் 23 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் டுபிளிசிஸ் வந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். மார்க்ரம் 45 ரன் எடுத்த நிலையில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் போல்டாகி வெளியேற, மில்லர் வந்தார். அவரும் டுபிளிசிஸும் நன்றாக ஆடி கொண்டிருந்தனர். டுபிளிசிஸ் அரை சதம் கடந்தார்.

அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்த போது டுபிளிசிஸ் 62 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் மில்லருடன் இணைந்தார் வாண்டர் டுசேன். இந்த ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மில்லர் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வாண்டர் டுசேனும் 41 ரன் எடுத்திருந்தபோது, சைபுதீன் பந்துவீச்சில் போல்டானார். இதனால் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

அடுத்து வந்த டுமினி, சில அதிரடி ஷாட்களை ஆடினார். அவர் 45 ரன்னில் ஆட்டமிழந்ததும் தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை தகர்ந்தது. 50 ஓவர் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 21 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் தரப்பில் முஷ்தபிஷூர் ரகுமான் 3 விக்கெட்டும், முகமது ஷைபுதீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். மெஹிடி ஹாசன், ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  75 ரன் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close