[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

பயிற்சிப் போட்டி: அபார சதமடித்தார் ஸ்மித், அசத்தலாக வென்றது ஆஸி!

smith-warner-and-bowlers-stall-england

பயிற்சி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை 12 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் சுமித் அபார சதம் அடித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. சவுதம்டனில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியுடன் மோதியது. காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் கேப்டன் பொறுப்பேற்றார்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில், ஓராண்டு தடைக்கு பின் அணிக்கு திரும்பியுள்ள ஸ்டீவன் சுமித் 102 பந்துகளில் சதம் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் 116 ரன் அடித்து அசத்தினார். வார்னர் 43 ரன்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 14 ரன்களும் எடுத்தனர். 

அடுத்து களம் புகுந்த இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 64 ரன்களும், பட்லர் 52 ரன்களும் விளாசினர். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இறுதி ஓவரில் அந்த அணியால் 2 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close