[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

மீண்டும் சர்ச்சையான நடுவரின் முடிவு - டென்ஷன் ஆன பொல்லார்டு

pollard-resorts-to-antics-after-umpiring-mistake-leaves-him-livid

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் முடிவால் டென்ஷன் ஆன மும்பை வீரர் பொல்லார்டு பேட்டை மேலே தூக்கி வீசி அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியிலும் நடுவரின் முடிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. 

            

போட்டியில் கடைசி ஓவரை பிராவோ வீசினார். பொல்லார்டு பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பிராவோ வீசிய மூன்றாவது பந்து எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்றது. ஆனால், நடுவர் அதற்கு ஓயிடு கொடுக்கவில்லை. இதனால், டென்ஷன் ஆன பொல்லார்டு பேட்டை மேலே சுழட்டி விட்டார். பின்னர் பேட்டை பிடித்துக் கொண்டிருந்தார். பொல்லார்டு இப்படி நடந்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியது. 

       

ஆனால், பொல்லார்டு அத்தோடு நின்றுவிடவில்லை. அடுத்த பந்தினை பிராவோ வீச ஓடிவந்தார். ஆனால், பொல்லார்டு ஓயிடு கோட்டிற்கு வெளியே சென்று பேட்டிங் செய்து கொண்டிருந்தார். கடந்த முறை பந்து அந்த லைனில் வந்ததால், அதனை கிண்டல் செய்யும் வகையில் அவ்வாறு நின்று கொண்டிருந்தார். பின்னர், அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

            

இது, களத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும், மைதானத்தில் இருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. நடுவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இரண்டு நடுவர்களும் பொல்லார்டு அருகில் சென்று விளக்கம் கொடுத்தனர். 

          

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பொல்லாடு 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close