[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

“பாண்ட்யா இந்திய அணியின் சொத்தாக இருப்பார்” - உலகக் கோப்பை குறித்து கபில்

icc-world-cup-2019-kapil-dev-picks-his-surprise-package-for-the-tournament

ஐசிசி உலகக் கோப்பை 2019 குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் எந்த அணி வெல்லும், யார் சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் உலகக் கோப்பை குறித்த தமது கணிப்பை தெரிவித்துள்ளார்.

அதில், “இம்முறை உலகக் கோப்பைக்கான இந்திய அணி சிறப்பாக உள்ளது. இந்த அணியில் நல்ல அனுபவ வீரர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளனர். அதனால் அணி சரியான வீரர்களை கொண்டுள்ளது. இந்திய அணி லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களுக்குள் வருவது நிச்சயம். அதற்கு பின் இந்திய அணியின் நிலமை சற்று கடினம்தான். ஏனென்றால் இம்முறை முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அனைத்தும் சமநிலையுடன் இருக்கும். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். 

என்னைப் பொருத்தவரை இம்முறை இந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முதல் 3 இடங்களை நிச்சயம் பிடிக்கும். நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடையே கடுமையான போட்டியிருக்கும். இந்த உலகக் கோப்பையில் யாரும் எதிர்பாராதவிதமாக மேற்கிந்திய தீவுகள் அணி செயல்படும் என நம்புகிறேன்.

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். அத்துடன் இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சிற்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அது கைக்கொடுக்கும். பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் நன்றாக பந்துவீசி வருகிறார்கள். இவர்கள் இம்முறை சிறப்பாக செயல்படுவார்கள். அதேபோல அணியின் ஆல் ரவுண்டர்  ஹர்திக் பாண்ட்யா இந்தியா அணிக்கு முக்கிய சொத்தாக இருப்பார்” எனக் கணித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close