[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சேப்பாக்கத்தில் டெல்லியை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே: தோனி ஆடுவது சந்தேகம்!

ipl-2019-csk-vs-dc-preview

சென்னையில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில், டெல்லி அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.  கேப்டன் தோனி இன்றைய போட்டியிலும் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில், லீக் சுற்று போட்டிகள் விரைவில் முடிய இருக்கின்றன. அடுத்து பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடக்க இருக்கின்றன. லீக் சுற்றின் 50 வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

கடந்த போட்டியில், மும்பை இண்டியன்ஸை சந்தித்தது சென்னை அணி. கேப்டன் தோனி காய்ச்சல் காரணமாகப் பங்கேற்க வில்லை. அவர் இல்லாததால் பலவீனமடைந்திருந்த சென்னை அணி, 156 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.  கடந்த 2 நாட்களாக தோனி பயிற்சி எதுவும் மேற்கொள்ளாததால் இன்றைய போட்டிக்கும் அவர் திரும்புவது சந்தேகம். அவருக்குப் பதிலாக, விக்கெட் கீப்பராக தமிழக வீரர், ஜெகதீசன் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஜடேஜாவும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார் என்பதால் அவரும் அணிக்குத் திரும்புகிறார். 

இன்றைய போட்டியில், தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் மீண்டும் பழைய அதிரடியை காட்ட வேண்டும். தொடர்ந்து சொதப்பி வரும் ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ் ஆகியோர் நிலைத்து நின்று அதிக ரன்கள் சேர்க்க வேண்டும். பந்து வீச்சில் தீபக் சாஹர், தாஹிர், ஹர்பஜன் ஆகியோர் பலமாக இருந்தும் சில போட்டிகளில் விக்கெட் வீழ்த்த தவறிவிடுகின்றனர். சென்னை ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய போட்டி, சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்து வதைப் பொறுத்தே சாதகமாக அமையும்.

டெல்லி அணி, இப்போது சிறப்பாக ஆடி வருகிறது. ஷிகர் தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, ரிஷாப் பன்ட் ஆகியோர் அந்த அணியின் தூண்களாக இருக்கின்றனர். பந்துவீச்சில் ரபாடா (25 விக்கெட்), அமித் மிஸ்ரா, லாமிச்சன்னே மிரட்டுகிறார்கள்.

புள்ளி பட்டியலில் 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடிக்கும். இதனால் இன்றைய போட்டியில்  பரபரப்புக்கு குறைவிருக்காது. போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close