[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

“சச்சின்.. சச்சின்..!” - சென்னை மைதானத்தை அதிர வைத்த ரசிகர்கள்

sachin-sachin-ipl-fans-loud-in-chennai-chepauk-ground

சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் வருகை தந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இன்றைய போட்டியில் தோனி இல்லை என்பதால், அவருக்கு பதில் சுரேஷ் ரெய்னா தலைமை தாங்கினார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் ஷர்மா 67 (48) ரன்கள் குவித்தார்.

இந்தப் போட்டியை காண முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் வருகை தந்திருந்தார். மைதானத்தில் சச்சினைக் கண்ட அவரது ரசிகர்கள், ‘சச்சின்.. சச்சின்..’ என்ற முழக்கங்களை எழுப்பினர். மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, சென்னை ரசிகர்களும் சச்சின் பெயரைக் கூறி சத்தமிட்டு கத்தினர். இதனால் மைதனாமே சச்சின் என்ற வார்த்தையால் அதிர்ந்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close