[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

விளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி

ipl2019-rcbvkxip-match-42-royal-challengers-bangalore-score-202-4-in-20-overs-against-kings-xi-punjab-in-bengaluru

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏபி டிவில்லியர்ஸின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூர் அணி 202 ரன் குவித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 42வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் பார்த்தீவ் படேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

     

விராட் கோலி 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பார்த்தீவ் 24 பந்தில் 43 ரன்கள் எடுத்து முருகன் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். பெங்களூர் அணி 6 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. ஏபி டிவில்லியர் ஒரு புறம் நிதானமாக விளையாட மொயின் லி 4, நாத் 3 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 81 ரன்னில் பெங்களூர் 4 விக்கெட் இழந்தது. பின்னர், டிவில்லியர்ஸ் உடன் ஸ்டொய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். 

            

டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்தார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் ஸ்டொய்னிஸும் 24 பந்தில் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close