[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் !

ipl-2019-rcb-vs-kxip-punjab-win-toss-elect-to-bowl

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 42வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் பார்த்தீவ் படேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பார்த்தீவ் 24 பந்தில் 43 ரன்கள் எடுத்து முருகன் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். பெங்களூர் அணி 602 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.

             

பாஞ்சாப் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கர்ரன், ஹர்பிரீட் ஆகிய இருவருக்கு பதிலாக பூரான், ராஜ்புட் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், பெங்களூர் அணியில் ஸ்டெயின்-க்கு பதிலாக சவுத்தி களமிறங்குகிறார். அதேபோல், நெகிக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் முதன்முறையாக களமிறங்குகிறார். 

இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேரடியாக மோதியுள்ளது. பெங்களூர் 11, பஞ்சாப் 12 போட்டிகளில் வென்றுள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றியும், 5இல் தோல்வியும் அடைந்து 5வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close