[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

உலகக் கோப்பைக்கான இந்திய அணி 15 ஆம் தேதி அறிவிப்பு

the-indian-cricket-team-for-world-cup-2019-to-be-announced-on-15-april

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி, வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30 ஆம் தேதி, இங்கிலாந்தில் தொடங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்கான அணியினரை முடிவு செய்யும் வகையில் உள்நாட்டுப் போட்டியை ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் நடத்தி வருகிறது. அதை வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கி றார்கள்.

நியூசிலாந்து, உலகக் கோப்பைக்கான அணியை ஏற்கனவே அறிவித்துவிட்டது. மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையே, இந்திய அணி, வரும் 15 ஆம் தேதி, அறிவிக்கப்பட இருக்கிறது. மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகும். 

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார், யார் சேர்க்கப்படுவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், 4 வது வீரராக யாரை தேர்வு செய்வது என்பதி ல் சரியான முடிவெடுக்க முடியவில்லை. அந்த இடத்துக்கு ராயுடு உட்பட பலரை மாற்றிப் பார்த்தும் சரியான வீரர்கள் அமையவில்லை. 

விராத் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல்/ குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை சேர்க்க போட்டி நிலவுகிறது. மற் றொரு தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, கலீல் அகமது, குணால் பாண்ட்யா உட்பட சிலருக்கு வாய்ப்பு கிடைக் கலாம் எனக் கூறப்படுகிறது.

உலகக் கோப்பையில், இந்திய அணி தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஜூன் 6 ஆம் தேதி இந்தப் போட்டி நடக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close