[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

“சூதாட்ட புகாரில் நாங்கள் செய்த தவறுதான் என்ன?” - உணர்ச்சிகளை கொட்டிய தோனி

ipl-2019-ms-dhoni-reveals-the-hardest-thing-he-had-to-deal-with-in-his-career

சூதாட்ட புகாரில் சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.

சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்களை வருத்தம் அடைந்தனர். இரண்டு ஆண்டுகள் தங்களுடைய மஞ்சள் நிறைய ஆடை  அணிந்த வீரர்களை பார்க்க முடியாமல் அவர்கள் ஏங்கிப் போனார்கள்.

              

புனே, குஜராத் அணிகளில் தங்கள் வீரர்கள் விளையாடினாலும் ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி, அதிரடியாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. இத்தகைய நிலையில், இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிக்கெட் விற்பனைக்கு கூடிய கூட்டத்தை பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். 

இந்நிலையில், ஐபிஎல் 2019 தொடர்பாக ரோர் ஆஃப் லையன் என்ற டாக்குமெண்டரியை ஹாட்ஸ் ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதில், ஐபிஎல் தொடரில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக, சூதாட்ட புகார் குறித்து உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். 

சூதாட்ட புகார் குறித்து தோனி பேசியது:-

          

“என்னுடைய வாழ்க்கையில் 2013ம் ஆண்டு மிகவும் கடினமானது. அதுவரை அப்படி ஒரு மன அழுத்தத்தை நான் அனுபவித்ததில்லை. 2007 உலகக்கோப்பையில் நம்முடைய அணி லீக் போட்டியிலேயே வெளியேறியது. அப்பொழுதும் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், 2013ம் ஆண்டு சர்ச்சை மிகவும் வித்தியாசமானது. அப்போது, மக்கள் கிரிக்கெட் சூதாட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதுதான் நாட்டில் பெரிய பேச்சாக இருந்தது. 

முதலில் குருநாத்தின் பெயர் அடிபட்டது. அவர் எங்கள் அணியைச் சேர்ந்தவர். அவர் அணியின் உரிமையாளரா?, தலைவரா?, ஆலோசகரா? உண்மையில் அவர் யார்? ஆனால், அவரை சீனிவாசனின் மருமகனாகத்தான் எங்களுக்கு தெரியும். 

                  

என்னுடைய பெயரும் சூதாட்ட புகாரில் வெளியானது. எங்கள் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், நானும் ஈடுபட்டிருப்பேன் என ஊடகங்களில் பேசப்பட்டது. கிரிக்கெட்டில் சூதாட்டம் சாத்தியமா?. ஆம் சாத்தியம் தான். ஒரு வீரர் சூதாட்டத்தில் ஈடுபடலாம், நடுவர், பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் எனத் தனிப்பட்ட முறையில் யாராவது ஈடுபடலாம். ஆனால், சூதாட்டத்திற்கு அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் தேவைப்படுவார்கள்.

நீங்கள் எப்படி இப்படி செய்தீர்கள் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை. எனக்கும் இதுகுறித்து மற்றவர்களிடம் பேச பிடிக்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும் எதனையும் நான் விரும்பவில்லை. என்னைப் பொருத்தமட்டில் கிரிக்கெட்தான் மிகவும் முக்கியமான ஒன்று. 

               

கிரிக்கெட்டில் செய்த சாதனைகளால்தான் நான் தற்போது இந்த நிலையில் இருக்கிறேன். மிகப்பெரிய குற்றம் என்பது கொலை கூட இல்லை. உண்மையில் அது சூதாட்டம்தான். அப்படி நான் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். போட்டியின் முடிவுகள் மிகவும் எதிர்ப்பாராத அளவில் வித்தியாசமாக இருந்தால், சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள். கிரிக்கெட் மீதான நம்பிக்கையையும் அவர்கள் இழக்கிறார்கள். இதனைவிட கடினமான விஷயம் வேறு எதுவும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 

சூதாட்ட புகாரில் தடை விதிக்கப்பட்ட போது எனக்கு கலவையான வருத்தம் இருந்தது. ஏனெனில், ஒரு கேப்டனாக அணியில் எந்தத் தவறு நடந்தது என்பதை கேட்க முடிந்தது. எங்கள் தரப்பில் தவறு நடந்தது உண்மைதான். ஆனால், வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டார்களா? நாங்கள் என்ன தவறு செய்தோம்? என எல்லா கேள்விகளும் கேட்டுக் கொண்டோம். யாராலும் விளக்க முடியவில்லை” இவ்வாறு கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close