[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

“முக்கியமான ஸ்டம்பிங்கை தவறவிட்டோம்” - விராட் கோலி விரக்தி

it-became-too-wet-to-bowl-it-was-very-difficult-to-bowl-in-the-right-areas-virat-kohli

பனிப்பொழிவால் பந்துவீச்சு மோசமடைந்து, அது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

4வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது தொடர்பாக பேசிய விராட் கோலி, “விக்கெட்டுகள் சரியாக விழுந்தன. ஆனால் பனிப்பொழிவு பற்றி இரண்டாவது முறையாக நாம் தவறான முடிவெடுத்துவிட்டோம். பனிப்பொழிவில் பந்துவீசுவது மிகக் கடினமானது. அது பந்துவீச்சை மோசமாக்கியது. நமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட முயன்றனர். ஆனால் ஆஷ்டான் டர்னர் அதனை முறியடித்துவிட்டார். ஹண்ட்ஸ்கோம்ப் மற்றும் காவஜாவும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். டர்னர் பேட்டிங் ஆட்டத்தையே மாற்றிவிட்டது. கடந்த போட்டியின் போது, பனிப் பொழிவு தொடர்பாக தவறான முடிவை எடுத்தோம் என தெரிவித்திருந்தோம். அதேபோல் இந்தப் போட்டியும் அமைந்துவிட்டது. 

ஆஸ்திரேலிய வீரர்கள் சிறந்த கிரிக்கெட்டர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இது சாதனை எதிர்ப்பாட்டாம். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் என்பதை நாங்கள் ஏற்கிறோம். கடந்த போட்டியில் கேதர் ஜாதவ் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் பனிப்பொழிவால் பந்துவீச சிரமப்பட்டனர். அதனால் தான் இந்தப் போட்டியில் சஹாலை கொண்டு வந்தோம். ஆனால் இன்றும் பனிப்பொழிவு பந்தை சரியான இடத்தில் வீச முடியாத வகையில் கடினமாக்கியது. முக்கிய ஸ்டம்பிங்க் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். ஃபீல்டிங்கிலும் நாங்கள் தோல்வியடைந்தோம். நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. கடினமாக உழைத்து இன்னும் தீவிரத்துடனும், ஆர்வத்துடனும் வந்து அடுத்த போட்டியை வென்று, தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்” என்றார். தொடர் 2-2 என சமனில் உள்ள நிலையில், அடுத்த போட்டியில் வெல்லும் அணி கோப்பையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close