[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

இரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசி.அணி 715 ரன் குவிப்பு!

williamson-s-double-century-takes-new-zealand-over-700

பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசினார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முத லாவது டெஸ்ட் கிரிக்கெட், ஹாமில்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இத னால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பாலின் சிறப்பான சதத்தால், அந்த அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. அவரைத் தவிர வேறு யாரும் நிலைத்து நிற்காததால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 234 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தமிம் இக்பால் 126 ரன் எடுத் தார். நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டை அள்ளினார். சவுதி 3 விக்கெட்டையும் போல்ட், கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட் டையும் வீழ்த்தினர்.

(ராவல்)

பின்னர் முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி தொடங்கியது. அந்த அணியின் ஜீத் ராவலும் டாம் லாதமும் தொடக்க வீரர்களாக களமிறங் கினர். சிறப்பாக ஆடிய ராவல் அபார சதம் அடித்தார். இது அவருக்கு முதல் சதம். அவர் 132 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டாம் லாதமும் சதம் அடித்தார். 161 ரன் எடுத்த அவர், சவும்யா சர்கார் பந்துவீச்சில் மிதுனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப் டன் கேன் வில்லியம்சன் ஒரு பக்கம் நிலைத்து நிற்க, மறுமுனையில் டெய்லர் (4 ரன்) நிக்கோலஸ் (53 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். 

நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 451 ரன் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 93 ரன்னுடனும் நீல் வாக் னர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

(கிராண்ட்ஹோம்)

இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய வாக்னர் 47 ரன்னிலும் அடுத்து வந்த வாட்லிங் 31 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேற, ஒரு பக்கம் நங்கூரமாக நின்ற கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசினார். 143 பந்தில் சதம் கண்ட வில்லியம் சன், 257 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு இரண்டாவது இரட்டை சதம். 

அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன்னாக இருந்தது. நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸில் 700 ரன்னுக்கு மேல் எடுப்பது இதுதான் முதல் முறை. இதையடுத்து அந்த அணி டிக்ளேர் செய்தது.

வில்லியம்சன் 200 ரன்னுடனும் கிராண்ட்ஹோம் 76 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close