[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“இந்திய வீரர்களை விட எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்” - நியூஸி. கேப்டன்

we-know-they-re-good-and-we-have-played-them-a-number-of-times-kane-williamson

இந்திய வீரர்கள் சிறப்பாகவும், தங்கள் வீரர்கள் அதைவிட சிறப்பாகவும் விளையாட வேண்டும் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கெயின் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் மட்டும் தனி ஒருவனாக போராடி அரை சதம் அடித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கனுஹில் உள்ள பே-ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 

பயிற்சிக்கிடையே பேட்டியளித்துள்ள நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், “இந்திய வீரர்கள் திறமையானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களுடன் நாங்கள் பல போட்டிகளில் மோதியுள்ளோம். அவர்கள் நல்லவர்கள் என்பதால், நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேசமயம் எங்கள் வீரர்களிடம் அதைவிட அதிகம் எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம்” என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close