[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

vijay-shankar-to-debut-india-opt-to-bowl

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தை வீசும்போது மழை பெய்தால் போட்டி தடை பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. 

இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. 

இதற்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் தொடரை, கைப்பற்றியதில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றினால், அது சாதனையாக இருக்கும். 
 
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார். அனுபவ வீரர் தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடி அரை சதம் அடித்தார். 

பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் இந்திய அணி, நம்பிக்கையுடன் இன்று களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு முதல் ஒரு நாள் போட்டி. ராயுடு, குல்தீப், முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு, கேதர் ஜாதவ், சாஹல் சேர்க்கப்பட்டுள்ளனர்

ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ் ஆகியோரையே நம்பி இருக்கிறது. கேப்டன் ஆரோன் பின்ச், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி ஆகியோர் ஏமாற்றி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் பேரன்டோர்ஃபுக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. அவர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியான் ஆகியோருக்குப் பதிலாக, ஸ்டான்லேக், ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அரோன் பின்ச்-சும் கேரியும் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அணி விவரம்:

இந்திய அணி:
விராத் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா, தவான், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, சாஹல்.

ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் பின்ச்  (கேப்டன்),. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டோயினிஸ், மேக்ஸ்வெக், ரிச்சர்ட்சன், ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆதம் ஜம்பா.

போட்டி தொடங்கி முதல் ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். இரண்டாவது பந்தை அவர் வீசும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடை பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close