[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

“தோனியை புரிந்துகொள்ள யாராலும் முடியாது” - வியந்துபோன விராட் கோலி

only-dhoni-knows-what-s-going-through-his-mind-at-ground-virat-kohli

ஆஸ்திரேலியாவை இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்ற இன்றைய தினம் தனக்கும், தோனிக்கும் சிறப்பான நாள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சதம் அடித்த இந்தியக் கேப்டன் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் வெற்றி குறித்து பேசிய கோலி, “மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பேட்டிங்கை இறுதி நேரத்தில் நாங்கள் கட்டுப்படுத்த முயன்றோம். அதேநேரம் மார்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஓரே ஒவரின் இரண்டு பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அது முக்கிய திருப்பமாக அமைந்தது. அவர்கள் விக்கெட் இழப்பால் நாங்கள் 330 என்ற கடின இலக்கை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 5 பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசியதால் கேப்டன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு முறையும் இலக்கை பலகையில் பார்த்தபடி களமிறங்கும் நான் முடிந்த வரை களத்தில் நிற்பதற்கு முயற்சிப்பேன். அந்த இலக்கை எட்டும்போது அது மகிழ்ச்சி அளிக்கும். வெற்றிகரமாக நானும் அணியின் வெற்றிக்கு உதவிவிட்டேன். இது மிகவும் கடினமான நாள். ஆட்டத்தின் இறுதியில் வழக்கம்போல தோனி களைப்பாகிவிட்டார். இன்றைய போட்டியில் தோனி அணியில் ஒருவராக விளையாடவில்லை. தோனி இன்றைய போட்டியில் அவரது தனித்துவத்தை காட்டிவிட்டார்.

 

விளையாடும் போது தோனி என்ன நினைக்கிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது அவருக்கு மட்டுமே தெரியும். அவர் ஆட்டம் சிறப்பாக போவதாக கணித்தால், பந்துகளை அடித்து வெளுப்பார். தோனியுடன் இன்று தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடினார். சரியான நேரத்தில் களமிறங்கி அவர் திறமையை வெளிப்படுத்தினார். தோனி எப்போதும் போல விளையாடினார். களத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யகொள்ள முயன்றோம். இன்றைய தினம் எங்களுக்கு சிறப்பான நாள்” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close