[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

கடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங், மீண்டும் சொதப்பினார் கே.எல்.ராகுல்

4th-test-can-australia-level-the-series

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் மீண்டும் சொதப்பினார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இப்போது பங்கேற்கிறது. முதலில் நடந்த 3 டெஸ்ட்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதனால் இந்த தொடரை வென்று சாதனைப் படைக்கும் வேட்கையுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இப்போதும் நடக்கும் டெஸ்ட் போட்டியை டிரா செய்தால் கூட தொடரை வசப்படுத்தி விடலாம். 

ஆனால், ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கி இருக்கிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் மார்னஸ் லாபஸ்சேஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளார். 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ராகுல் கடந்த டெஸ்ட் போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். மயங்க் அகர்வாலும் விஹாரியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்நிலையில் ரோகித் சர்மா, இந்தியா திரும்பிவிட்டதால் அவருக்குப் பதிலாக ராகுல் மீண்டும் சேர்க்கப்பட்டார். சிட்னி ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஜடேஜாவும் குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி விவரம்:
விராத் கோலி, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா. 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மயங்க் அகர்வாலும் ராகுலும் களமிறங்கினர். போட்டி தொடங் கிய சில நிமிடங்களிலேயே, ஹசல்வுட் பந்து வீச்சில் ராகுல் 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வாலு டன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். 22 ஓவர் முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்து ஆடி வருகிறது. மயங்க் அகர்வால் 39 ரன்னும் புஜாரா 14 ரன்னும் எடுத்து ஆடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close