[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம் 

india-vs-west-indies-rohit-sharma-rues-ms-dhoni-absence-calls-it-big-miss

டி20 தொடரில் மகேந்திர சிங் தோனி இடம்பெறாதது மிகப்பெரிய இழப்பு என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, இப்போது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமீப காலமாக அவரது ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளிலும் அவர் தடுமாறி வருகிறார். டி20 போட்டியிலும் ரன் குவிக்க திணறி வருகிறார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

           

இதனையடுத்து, நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இளம் படை டி20 தொடரை வென்றது. இறுதியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் தோனி இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

      

இந்நிலையில், டி20 தொடரில் மகேந்திர சிங் தோனி இடம்பெறாதது மிகப்பெரிய இழப்பு என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து கூறுகையில், “இலங்கையில் நடைபெற்ற நிடாஹாஸ் தொடரிலும் தோனி இடம்பெறவில்லை. தோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு. அவர் அணியில் இடம்பெற்றிருப்பது எனக்கு மட்டுமல்ல நிறைய வீரர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு” என்றார் ரோகித் சர்மா. 

     

முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர்களில் தோனி நீக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தது. இளம் வீரர்களுக்கு தோனியாகதான் விட்டுக் கொடுத்தார் என்று தலைமை தேர்வாளர் எம்.கே.பிரசாத் விளக்கம் அளித்தார். மேலும், பேட்ஸ்மேன் என்ற அடிப்படையிலேயே பண்ட்டை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி தற்பொழுதும் உலகின் நெம்பர் ஒன் விக்கெட் கீப்பராக உள்ளார் என்றும் கூறினார்.

          

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close