[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்!

cricketer-mashrafe-mortaza-to-stand-in-election

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மஷ்ரஃப் மோர்டாஸா தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஷ்ரஃப் மோர்டாஸா. ஆல் ரவுண்டரான இவர், அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த மாதம் 23 ஆம் தேதி பங்களாதேஷில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மோர்டாஸாவை களமிறக்க பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் மஹ்புபுல் அலம் ஹனிஃப் கூறும்போது,  ‘மோர்டாஸா போட்டியிட பிரதமர் ஷேக் ஹசினா பச்சைக் கொடி காட்டிவிட்டார். மோர்டாஸாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். பங்களாதேஷின் மேற்கு பகுதியில் உள்ள அவரது சொந்த தொகுதியான நரேலில், மோர்டாஸா போட்டியிடுகிறார்’ என்றார். இதுபற்றி மோர்டாஸா வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை. 

(ஷேக் ஹசினாவுடன் மோர்டாஸா)

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறும்போது, ‘கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவதற்கு தடை ஏதும் இல்லை. தேர்தலில் போட்டியிட எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவர் பயன்படுத்த விரும்பினால், அதனால் எங்களுக்கு பிரச்னை இல்லை. விளையாட்டை விட்டுவிடாமல், இதையும் கவனித்துக்கொண்டே அரசியலிலும் அவர் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

தெற்காசியாவில் கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவது புதிதில்லை. ஆனால், ஓய்வுபெற்ற பிறகுதான் அரசியலில் ஈடுபடுவார்கள். அணியில் இருக்கும் வீரர் ஒருவர், அரசியலில் களமிறங்குவது இதுதான் முதல் முறை எனக் கூறப்படுகிறது.

மோர்டாஸா, அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2009 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 199 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மோர்டாஸா, 252 விக்கெட்டுகளையும் 1722 ரன்களையும் எடுத்துள்ளார். 

மோர்டாஸா அரசியல் களமிறங்குவதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஓமர் பாருக் என்ற ரசிகர் அவரது முகப்புத்தகத்தில், ‘நான் சொல்வது தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் இது அவரது மோசமான முடிவு’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close