[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

தவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி !

ind-vs-wi-3rd-t20-delhi-boys-dhawan-and-pant-chase-down-182-india-clean-sweep-windies-3-0

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக வென்றுள்ளது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிகோலஸ் பூரான், பிராவோவின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 2 விக்கெட் சாய்த்தார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தார். 

        

இதனையடுத்து, 182 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 17 ரன்னில் அவுட் ஆனார். 45 ரன்னிற்குள் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்தது. இதனையடுத்து, ஷிகார் தவானுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை நன்றாக அடித்து விளையாடினர். தவான் 36 பந்திலும், பண்ட் 30 பந்திலும் அரைசதம் விளாசினர். பண்ட் 38 பந்தில் 58 ரன் அடித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர்களை விளாசினார். 

        

19வது ஓவரில் பண்ட் அவுட் ஆன பின்னர், ஆட்டத்தில் சற்றே பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, கடைசி ஓவரில் 5 ரன் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தில் 2 ரன் எடுத்த தவான், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் பாண்டே ஒரு ரன் எடுத்தார். இதனையடுத்து, 4 பந்தினை டாட் பந்தாக்கிய தவான், 5வது பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 62 பந்தில் அவர் 92 ரன் எடுத்தார். இதனால், கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், ஆட்டத்தில் சற்றே பதட்டம் தொற்றிக் கொண்டது. 

      

கடைசி பந்தில் பாண்டே ஒரு ரன் எடுக்க, இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர் அனைத்தையும் முழுமையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.   

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close