[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

கடைசிக் கட்ட அழுத்தம்: என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?

didn-t-need-to-bat-at-a-150-strike-rate-in-this-game-dinesh-karthik

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்காத்தாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்தவீச தீர்மானித்தது. இந்திய அணியில் அறிமுக வீரராக குணால் பாண்ட்யா களமிறக்கப்பட்டார்.முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 

20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 109 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. அந்த அணியில் ஆலேன் 27, பவுல் 15, பொலார்ட் 14 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதையடுத்து 110 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 6 மற்றும் தவான் 3 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 16 எடுத்து ஆட்டமிழக்க, ரிஷாப் பன்ட் தன் பங்குக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து திருப்தி பட்டுக்கொண்டவராக பெவிலியன் திரும்பினார். 

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் மனிஷ் பாண்டே ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் 19 ரன்கள் எடுத்த நிலையில் மனிஷ் பாண்டே ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய தினேஷ் கார்த்திக் இறுதி வரை ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 31 ரன்கள் எடுத்தார். அவருடன் ஆடிய அறிமுக வீரர குணால் பாண்ட்யா 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இவர்களது ஆட்டத்தால் 17.5 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வெற்றிக்கு காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் கூறும்போது, ‘இந்த ஆடுகளம் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் பேட்டிங் செய்வதற்கும் நன்றாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், தவான் விக்கெட்டை அவர்கள் வீழ்த்தியது ஸ்பெஷல். தொடக்க விக்கெட்டுகள் விழுந்துவிட்டதால், கடைசிக்கட்டத்தில் இறங்குபவர்களுக்கு அழுத்தம் இருக்கும். அதைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார் போல ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என் வேலை. இதை நான் எனக்குள் சொல்லிக்கொண்டே பொறுமையாக விளையாடினேன். அதோடு நேர்மறையான கிரிக்கெட்டையும் ஆடினேன். நினைத்தது போலவே நடந்தது. குறைந்த ஸ்கோரை கொண்ட இந்தப் போட்டியில், 150 ஸ்டிரைக் ரேட் வருமாறு வேகமாக அடிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close