[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சச்சின் சாதனையை முறியடித்தார் ரோகித்

rohit-sharma-now-became-the-batsman-to-score-most-number-of-150s

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடித்துள்ளார். 

கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 322 ரன்கள் குவித்து அசத்தியது. டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதல் ஒருநாள் போட்டியிலேயே மிரட்டினர். 323 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷிகர் தவான் 4 ரன்னில் அவுட் ஆனார். இருப்பினும், எந்தவொரு பதட்டமும் இல்லாமல் கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஆட்டத்தை கையிலெடுத்தனர். 

     

ரோகித் நிதானமாக விளையாட விராட் கோலி அதிரடியாக அடித்து விளையாடினார். ஒரு கட்டத்திற்கு மேல் ரோகித் ஷர்மாவும் அதிரடியை காட்டினார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். விராட் 88 பந்துகளிலும், ரோகித் 80 பந்துகளிலும் சதம் விளாசினர். 

         

விராட் 140 ரன்னில் ஆட்டமிழக்க, ரோகித் தொடர்ந்து அதிரடி காட்டினார். 117 பந்துகளில் 152 ரோகித் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 47 பந்துகள் மீதமிருந்த நிலையில் அபார வெற்றி பெற்றது.

           

ரோகித் சிக்ஸர் விளாசி வெற்றி பெறச் செய்தார். அவர் 15 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடித்தார். ரோகித் சர்மா 6வது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதன் மூலம், 5 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற சச்சின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். 

150+ ரன்கள் குவித்தவர்கள்:-

ரோகித் சர்மா        - 6
சச்சின் டெண்டுல்கர் - 5
டேவிட் வார்னர்     - 4
ஹசிம் அம்லா      - 4
கிறிஸ் கெயில்      - 4
சானத் ஜெயசூர்யா   - 4

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close