[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்

indvswi-2nd-test-virat-kohli-request-fans-for-clapping

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ரசிகர்களை பார்த்து கை தட்டுமாறு விராட் கோலி கேட்டுக்கொண்டார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணி இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி, 101.4 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியி ரோஸ்டன் சேஸ் 106 (189) ரன்கள் குவித்தார். கேப்டன் ஜாஸன் ஹோல்டர் 52 (92), சாய் ஹோப் 36 (68) ஷேன் டோவ்ரிச் 30 (63) ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 106.4 ஓவர்களில் 367 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ரிஷ்ப் பந்த் 92 (134), ரஹானே 80 (183), பிருத்வி ஷா 70 (53), விராட் கோலி 45 (78) ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜாஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், ஷன்னான் கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிராத்வெய்ட் மற்றும் கியெரன் பவெல் ஆகியோர் பூஜ்ஜியம் ரன்களில் வெளியேறினர். இதனால் அந்த அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. இதையடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க அந்த அணி 127  ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இதற்கிடையே அந்த அணி 105/6 என்ற நிலையில் விளையாடிய போது, மைதானத்தில் ரசிகர்கள் அமைதியாக இருந்தனர். அப்போது விராட் கோலி வீரர்களை உற்சாகப்படுத்த கைதட்டினார். அத்துடன் ரசிகர்களையும் பார்த்து கை தட்டுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் ரசிகர்களும் கைதட்டி, ஆரவாரம் செய்தனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close