[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

இந்த முறை தோனிக்கு செக் - களமிறங்குகிறார் ‘ரிஷப் பண்ட்’?

rishabh-pant-might-replace-ms-dhoni-in-the-upcoming-odi-series-against-west-indies-report

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனிக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிறக்கப்படுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தற்போதும் உலகின் நெம்பர்.1 விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி திகழ்கிறார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், அவரது பேட்டிங் ஃபார்ம் முன்பு போல் வீரியமாக இல்லை. சிறந்த பினிஷர் என்று பெயர் எடுத்த தோனி, தற்போது வெற்றியுடன் ஆட்டத்தை முடிக்க திணறுகிறார். இருப்பினும், தோனி 2019 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவார் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சமீப காலமாக இளம் வீரரான ரிஷப் பண்ட் ஆட்டம் எல்லோரையும் கவர்ந்துவிட்டது. இங்கிலாந்து தொடரில் ஓவல் மைதான ஆட்டத்தில் சதம் அடித்த ரிஷப் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 87 ரன்கள் விளாசினார். அதனால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனிக்கு பதிலாக சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது. 

          

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளனர். டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் அணியிலும் நிறைய அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றே கூறப்படுகிறது. விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிப்பது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தோனி 2019 உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்பது நமக்கு தெரியும். 6 அல்லது 7வது இடத்தில் சிறப்பாக விளையாடி வரும் ‘பண்ட்’க்கு வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை. அவர் சிறப்பாக ஆட்டத்தையும் முடிக்கிறார்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். அதேபோல், அணி தேர்வில் பிசிசிஐ, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி அதிரடியான முடிவுகளை எடுத்து வருகின்றனர். டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா, புவனேஸ்வர்குமார், இஷாந்த் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு, புதுமுக, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். அதனால், துணிச்சலாக தோனிக்கு பதில் ரிஷப் பண்ட் களமிறப்படுவார் என்றே தெரிகிறது. 

       

கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, சமீபகாலமாக திணறி வருகிறார். தன் மீதான விமர்சனங்களுக்கு தோனி தனது பேட்டிங் மூலமே பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால், தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனிக்கு அந்த வாய்ப்புகளும் பறிபோய்விடும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close