[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

“என்னுடைய பவுலிங் வாழ்க்கையை மாற்றியவர் தோனி” - முகமது சிராஜ் நெகிழ்ச்சி

siraj-reveals-how-dhoni-changed-his-career-and-helped-him-earn-a-test-call-up

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அக்டோபர் 4-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதனிடையே, டெஸ்ட் போட்டிக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், மயங்க் அகர்வால், முகமது சிராஜ் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்கள். 

டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் நேரடியாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிராஜ் அறிமுகமானார். 3 டி20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட் எடுத்துள்ளார். 17 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட் எடுத்துள்ளார். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 இன்னிங்சில் 37 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள முகமது சிராஜ், தன்னுடைய பவுலிங் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் தோனி என்று கூறியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இளம் வீரர்களுக்கு களத்தில்  ஆலோசனை சொல்லி வழிநடத்துவார். அந்த வகையில் தான் சிராஜ் அறிமுகமான நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது. 

சிராஜ் கூறுகையில், “பேட்ஸ்மேனின் பாதங்கள் எப்படி நகர்த்துகிறார்கள் என்று நன்றாக பாருங்கள். அதற்கு தகுந்தாற்போல், உங்களது லைன் மற்றும் லென்த்தை மாற்றுங்கள். அவர் எனக்கு அளித்த சின்னச்சின்ன ஆலோசனை என்னுடைய போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியது” என்றார். 

           

மேலும் கேப்டன் விராட் கோலி அளித்த ஒத்துழைப்பு குறித்து, “நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டேன். அப்போது கோலி உடன் ஆலோசனை செய்தேன். அந்த நேரத்தில் சற்று பதட்டம் இருந்தது. அப்போது, ‘கவலைப்பட வேண்டாம். ஃபீல்டிங்கில் பார்த்துக் கொள்வோம். சும்மா உங்களுடைய அறிமுக போட்டிக்கு தயாராகுங்கள்’ என்றார். போட்டி தொடங்கிய பின்னர், ‘நான் உங்களுடைய போட்டியை பார்த்திருக்கிறேன். நீங்கள் எப்படி இதுவரை எப்படி விளையாடினீர்களே அதேபோல் விளையாடுங்கள். எந்தப் பரிசோதனையும் வேண்டாம்’ என்று கூறினார். எனக்குள் இருந்த அழுத்தத்தை வெளியே எடுத்துவிட்டார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை எனது முதல் சர்வதேச விக்கெட்டாக எடுத்த பின்னர் மகிழ்ச்சி அடைந்தேன்” என நெகிழ்ச்சியாக கூறினார். 

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா இல்லாத நிலையில், சிராஜ் தனது திறமையை காட்ட வேண்டிய நிலையில் உள்ளார். ராஜ்கோட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close