[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

250 ரன்கள் இலக்கு! - எதிர்கொள்ளுமா ஆப்கான்..?

asia-cup-2018-banvsafg-250-target-for-afg

ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 249 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறிவிட்டன. இன்றைய போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பங்களாதேஷில் தொடக்க ஆட்டக்காரர் லிடான் பொறுப்புடன் விளையாடி 41 (43) சேர்த்தார். அதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். விக்கெட் கீப்பர் முஷ்ஃபீர் மட்டும் 33 (52) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 5 விக்கெட்டிற்கு பிறகு ஜோடி சேர்ந்த இம்ருல் மற்றும் முகமதுல்லா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அவர்களின் ஆட்டத்தால் அணியின் ரன்கள் 200ஐ தாண்டியது. இம்ருல் 72 (89) மற்றும் முகமதுல்லா 74 (81) ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. 250 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து ஆப்கானிஸ்தான் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணியில் குல்பாதின் 2 விக்கெட் சாய்த்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close