[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தோனி செய்த உதவிகள்: அம்பத்தி ராயுடு நெகிழ்ச்சி!

dhoni-has-helped-me-a-lot-ambati-rayudu

இந்திய அணிக்கு மீண்டு வந்ததற்கு தோனி செய்த உதவிகள் அதிகம் என்று அம்பத்தி ராயுடு கூறினார்.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய ஒரு நாள் அணியில் கடைசியாக 2016-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தார். பிறகு இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடு, கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கியமானவராக இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மொத்தம் 602 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 149.75 ஆக இருந்தது.

இதையடுத்து இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல ஒரு நாள் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் உடல் தகுதித் தேர்வில் அவர் தேர்வு பெறவில்லை. ’யோ யோ’வின் குறைந்தப்பட்ச தகுதி ஸ்கோர் 16.1 ஆகும். இதில் ராயுடு தோல்வி அடைந்தார் . இரண்டு வருடங்களுக்கு பிறகு அணியில் வாய்ப்புக் கிடைத்தும் யோ யோ டெஸ்ட், அந்த வாய்ப்பை ராயுடுவிடம் இருந்து பறித்துவிட்டது.

சிறப்பான ஃபார்மில் இருந்தும் ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ராயுடு சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கிறார். இந்தப் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அம்பத்தி ராயுடு கூறும்போது, ‘அணிக்கு மீண்டு வந்திருக்கிறேன். இதற்கு தோனி செய்த உதவிகள் அதிகம். விராத் கோலி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாதது அணிக்கு இழப்புதான். அவர் இல்லாவிட்டாலும், வெற்றி பெறும் அளவுக்கு திறமையைன அணியாக இந்திய அணி இருக்கிறது. அணியில் தோனி இருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டன். அனைவருக்கும் அவரது ஆலோசனை பயன்படும். உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில் அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை பற்றி கேட்கிறார்கள். அது பற்றி நான் இப்போது நினைக்கவில்லை. ஆடும் லெவனில் இடம் கிடைக்க கடும் போட்டி நிலவுவதாகவும் நினைக்க வில்லை. அதை யோசித்துக் கொண்டிருந்தால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாது. அதோடு உலகக் கோப்பைப் பற்றி யாரும் இப்போது நினைக்கவில்லை. ஆசியக் கோப்பை போட்டி பற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறோம். ஹாங்காங்குடன் விளையாடிய அடுத்த நாளே பாகிஸ்தான் அணியுடன் போட்டியில் பங்கேற்பது பற்றி கேட்கிறார்கள். இது கடினமானதுதான். இருந்தாலும் அது எங்களுக்கு பாதகமாக இருக் காது. இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமாகத்தான் இருந்தது. இப்போது அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பதில் மகிழ்ச்சி. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close