[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

கால்பந்து ஹீரோவைச் சந்தித்த கே.எல்.ராகுல்!

kl-rahul-meets-chelsea-star-and-world-cup-winner-n-golo-kante

பிரான்ஸ் கால்பந்துவீரர் நிகோலோ கன்டேவை, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்திய அணியின் பல வீரர்கள் கால்பந்து காதலர்கள். குறிப்பாக கேப்டன் விராத் கோலியும் கே.எல்.ராகுலும் கால்பந்தை தீவிரமாக நேசிப்பவர்கள். இந்திய அணியின் பயிற்சியில் கூட கால்பந்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இங்கிலாந்தில், பிரான்ஸ் கால்பந்து வீரர் நிகோலோ கன்டேவை சந்தித்து பேசியுள்ளார். பிரான்ஸ் கால்பந்து வீரரான கன்டே, கடந்த ஃபிபா உலகக்கோப்பையை பிரான்ஸ் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். நட்சத்திர கால்பந்துவீரரான இவர், செல்சியா அணிக்காக விளையாடி வருகிறார். இவரைச் சந்தித்து கால்பந்து உலகக்கோப்பை அனுபவங்கள் பற்றி பேசியிருக்கிறார் கே.எல்.ராகுல். 

இதுபற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ராகுல், ‘கிரிக்கெட் மற்றும் கால்பந்துபற்றி கன்டேவுடன் பேசினேன். கால்பந்தை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார். அதில் எப்படி வளர்ந்தார் என்பது பற்றியும் உலகக் கோப்பை அனுபவம் பற்றியும் பேசினோம். நான் செல்சியா அணியின் ரசிகர் இல்லை என்பதில் அவருக்கு வருத்தம். உண்மையிலேயே, எளிமையான மனிதர். மரியாதைக்குரியவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close