[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இங்கிலாந்துக்கு எதிராக நாளை, முதல் டெஸ்ட்: குல்தீப், ராகுலுக்கு வாய்ப்பில்லை?

kuldeep-kl-rahul-may-not-feature-in-first-test

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு இடம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் இவ்விரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

வலுவான இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் ஆடுவதால் கூடுதல் பலத்துடன் இருக்கிறது. அந்த அணியில் அலைஸ்டர் குக், ஜோ ரூட், ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், மோர்கன், பட்லர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். பேட்டிங்கில் அந்த அணி வலுவாக உள்ளது. அதே நேரம் வேகப்பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் ஸ்டூவர்ட் பிராடும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். பேட்ஸ்மேன்களின் பிளஸ், மைனஸ் அறிந்து பந்துவீசுவதில் வல்லவர்கள். அவர்களுக்கு துணையாக டாம் குர்ரன், ஜோர்டான், பிளங்கட், மார்க் உட் ஆகியோரில் இரண்டு பேர் களமிறக்கப்படலாம். அடில் ரஷித் சுழலில் மிரட்டுவார் என்பதால் அந்த அணி தெம்பாக இருக்கிறது. 

இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களின் தடுமாற்றம் தடுக்கப்பட வேண்டும். தவான், முரளி விஜய், ராகுல், புஜாரா ஆகியோர் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்றாலும் தென்னாப்பிரிக்க தொடரில் இவர்கள் அனைவருமே தடுமாறினார்கள். அடுத்து வருகிற கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் நிலைத்து நின்று ஆட வேண்டும். ஹர்திக், அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் அதுவும் இந்திய அணிக்கு பலம்தான்.  இங்கிலாந்தில் இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தப் போட்டியில் அதை மாற்றுவார் என்று நம்பலாம். 

பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார், பும்ரா இல்லாதது பின்னடைவுதான். அவர்கள் இடத்தை இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இவர்களும் அனுபவ சுழல்கள் அஸ்வின், ஜடேஜாவும் இங்கிலாந்து வீரர்களை மிரட்டுவார்கள். கூடவே குல்தீப் யாதவும் இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கும் ராகுலுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

நாளை நடக்கும் போட்டியில் இந்திய உத்தேச அணி விவரம்:
தவான், முரளி விஜய், புஜாரா, விராத் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் அல்லது முகமது ஷமி.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close