[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்
  • BREAKING-NEWS அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக, புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்- இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்திய வீரர்களை கடுப்பேற்றிய இங்கி. வீரர்கள்: தினேஷ் கார்த்திக் தகவல்!

dinesh-karthik-excited-but-nervous-ahead-of-first-test

இந்தியா டெஸ்ட் அணியில் பத்து வருடத்துக்குப் பின் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக சாஹா விலகியதால் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். அவர் காயம் இன்னும் குணமாகாததால் இப்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்துள்ளார்.

ராகுல் டிராவிட் தலைமையில் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கும் இடம் பெற்றிருந்தார். 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் அவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.இந்நிலையில் இந்திய அணி, இங்கிலாந்தில் இப்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்த டெஸ்ட் தொடர் பற்றி தினேஷ் கார்த்திக் கூறும்போது, ’10 வருட இடைவெளிக்குப் பின் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் கொஞ்சம் பதட்டமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.  அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக விளை யாடுவது சவாலானது. 2007-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். அந்தப் போட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு அதிகமாக மனதில் இல்லை. ஆனால், இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே உரசலும் வாக்குவாதங்களும் ஏற்பட்டது.

டிரன்ட்பிரிட்ஜில் நடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானை அவுட் ஆக்க வேண்டும் என்பதற்காக, பிட்சில் ஜெல்லி மிட்டாய்களை இங்கிலாந்து வீரர்கள் போட்டு கடுப்பேற்றினர். இதனால், ஜாகீர்கான் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர்களுக்குப் பதிலடி கொடுத்த ஜாகீர்கான், 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். நாட்டிங்காமில் தோல்வியடைய இருந்த போட்டி யில் டிரா செய்தோம். ஓவலில் நடந்த போட்டியில் கும்ப்ளே சதம் அடித்தார். அந்தப் போட்டியை டிரா செய்தோம். அந்த நினைவுகளோடு இங்கிலாந்து தொடரை எதிர்பார்த்துள்ளேன். கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரின் தலைமையில் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறோம்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close