[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

சதத்தை நோக்கி தினேஷ் கார்த்திக்: மீண்டது இந்திய அணி!

india-vs-essex-kohli-dinesh-karthik-hit-fifties

இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் அணியுடனான போட்டியில் விராத் கோலி, தினேஷ் கார்த்திக் ஆட்டத்தால் இந்திய அணி மீண்டது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான நான்கு நாள் போட்டி நேற்றுத் தொடங்கியது. இது அங்கீகாரமற்ற போட்டி என்பதால் இந்திய அணியில் 18 வீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி, இந்திய அணி திணறியது

முதல் ஓவரிலேயே இந்திய அணி, தவானின் விக்கெட்டை பறிகொடுத்தது. முதல் பந்திலே அவுட் ஆனார் அவர். ஆட்டத்தின் 3வது ஓவரில் புஜாரா ஒரு ரன்னில் நடையைக் கட்ட, இந்திய அணி 5 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

 பின்னர் முரளி விஜய்யுடன், ரஹானே சேர்ந்தார். இருவரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஆனால், இந்தப் போராட்டமும் சிறிது நேரம்தான் நீடித்தது. 17(47) ரன் எடுத்த நிலையில், ரஹானே ஆட்டமிழந்தார்.  அடுத்து 

முரளி விஜய்யுடன் கேப்டன் விராத் கோலி இணைந்தார். கோலியின் ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. 28 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.  நிதானமாக ஆடி வந்த முரளி விஜய் 53 ரன்கள் எடுத்த நிலையில் வால்டர் பந்துவீச்சில் போல்டானார். 

அடுத்து கோலியுடன் இணைந்தார் கே.எல்.ராகுல். இவரும் சிறப்பாக ஆடினர். கோலி 68 ரன்னில் வால்டர் பந்து வீச்சில் சோப்ராவிடமும் ராகுல் 58 ரன்னில் நிஜார் பந்துவீச்சில் டிக்சனிடமும் கேட்ச் கொடுத்து அவுட் ஆயினர். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடன் ஆடி வருகின்றனர். இவர்கள் ஆட்டத்தால் சரிவில் இருந்து இந்திய அணி மீண்டது. தினேஷ் கார்த்திக் இன்றைய ஆட்டத்தில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. 
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close