[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

’அதுக்கெல்லாம் அசத்தல் திட்டம் இருக்கு’: புஜாரா நம்பிக்கை!

virat-kohli-and-co-better-prepared-for-england-says-cheteshwar-pujara

‘இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை எதிர்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம்’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கூறினார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் போட்டி தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே இந்தப் போட்டி பற்றி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா கூறும்போது, ‘கடந்த காலங்களை விட இந்திய அணி இப்போது சிறப்பாக இருக்கிறது. அதனால் தொடரை வெல்ல முடியும்’ என்று தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறும்போது, ‘இந்த தொடருக்கு இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக தயாராகி இருக்கிறார்கள். கடினமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு சிறப்பாக விளையாட முடியும். கவுண்டி போட்டிகளில் விளையாடிய அனுபவம் எனக்கு கைகொடுக்கும். இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது கடினம்தான். முக்கியமானது வானிலை. இந்த மாதிரி நேரத்தில் மனநிலை முக்கியம். நீங்கள் நிலைத்து நின்றபின், வலுவான ஷாட்களை ஆடலாம்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை சமாளிப்பதை பற்றி கேட்கிறார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் இரண்டு பேருமே தந்திரமாக பந்துவீசுபவர்கள். ஆனால் அவர்களை எதிர்கொள்வது எப்படி என்று திட்டம் வைத்திருக்கிறோம். இதில் சிலர் எங்களுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட்டிருந்தாலும் எங்களிடமும் திட்டம் இருக்கிறது. இந்திய சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்துவீசுபவர். அவர் பந்துவீச்சில் ஆடியிருக்கிறேன். அவரது விதவிதமான பந்துவீச்சு, பேட்ஸ்மேனை திணற வைக்கும் என்பது உண்மைதான்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close