[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

’வீரர்கள் தேர்வில் ’யோ-யோ’ மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது’

yo-yo-test-shouldn-t-be-sole-selection-criterion-says-sachin

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதித் தேர்வில் யோ யோ டெஸ்ட் மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில், ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக ‘யோ -யோ’ என்னும் உடற்தகுதித் தேர்வு மேற்கொள்ளப் படுகிறது. இதில் தேர்வு பெற்றால் மட்டும்தான் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற முடியும். ‘யோ -யோ’வில் இந்திய வீரர்கள் தேர்வாக, 16.1 என குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்த இந்த ’யோ- யோ’வை, இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், அனில் கும்ப்ளே. அவர் பயிற்சியாளராக இருந்தபோது இந்த முறையை இறக்கு மதி செய்தார்!

ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ‘யோ யோ’ சோதனை கடந்த மாதம் நடைபெற்றது. இதில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு, தோல்வி அடைந்ததால் வெளியேற்றப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சன் ஆகியோரும் தோல்வி அடைந்திருந்தனர். இதனால், யோ யோ சோதனை குறித்து பலர் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்திய தேர்வுக் குழு முன்னாள் உறுப்பினர் சந்தீப் பாட்டீல் கடுமையாக இதை எதிர்த்திருந்தார். அதோடு ’வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடும் வீரர்களை அரை மணி நேர உடல் தகுதி தேர்வின் அடிப்படையில் நீக்குவது எந்த விதத்தில் நியாயம்? வீரர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, ‘யோ- யோ தேர்வை மட்டுமே வீரர்களின் உடல் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோலாக இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்திருக்கக் கூடாது. நான், யோ-யோ தேர்வில் பங்கேற்றதில்லை.

எங்களுக்கு பீப் டெஸ்ட் வைக்கப்பட்டது. அது இதற்கு கொஞ்சம் நெருக்கமான டெஸ்ட்தான். ஆனால் அது ஒன்றை மட்டுமே உடல் தகுதித் தேர்வாக வைத்திருக்கக் கூடாது. வீரர்களின் திறமையை அறியும் விதமாக,  கலவையான சில உடல் தகுதி தேர்வுகள் வைக்கப்பட வேண்டும். என்னை பொறுத்தவரை யோ-யோ முக்கிய மானது என்றாலும் அதே நேரம் வீரர்களின் திறனை அறிவதும் முக்கியம்’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close