[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

பிசிசிஐ-க்கு மட்டும் தோனி தான் கேப்டனாம்..! இது கோலிக்கு தெரியுமா?

ms-dhoni-profile-goof-up-by-bcci-leads-to-laugh-riot-on-twitter

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோனி 2 வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. அப்போது வீரர்கள் பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தபோது, அம்பயர்களிடம் இருந்து தோனி பந்தினை வாங்கியதால், அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்று ரசிகர்கள் ட்ரோல் செய்துவிட்டனர். தோனியின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சேவாக், கம்பீர் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

                     

(இதனையும் படியுங்கள்...அதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி?)

இப்படி தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் தோனியை இன்னும் கேப்டன் என்றே குறிப்பிட்டுள்ளது. இதனை எப்படியே ரசிகர்கள் துப்பறிந்துவிட்டார்கள். பிசிசிஐ-யில் தோனியின் புரோஃபைல் இருக்கும் இடத்தில் அவரை கேப்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை, ஸ்கீரின் ஷாட் எடுத்து ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

                           

அவரது ரசிகர் ஒருவர், ‘தோனி இரண்டு வருடங்களுக்கு முன்பே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். ஆனால், பிசிசிஐ தற்போது அவர் தான் கேப்டன் என்று நினைக்கிறது. மற்ற அனைவரும் தற்காலிக கேப்டன் தான் ஆனால்... கேப்டன் கூல் தோனி இந்திய அணியின் நிரந்தர கேப்டன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

                            

மற்றொரு ரசிகர், ‘முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அந்தப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதை பிசிசிஐ உணர்த்துகிறது. அப்படியில்லை என்றால் அவர் மாற்றுவதற்கு மறந்திருக்கலாம். இருப்பினும், தோனியை இன்னும் கேப்டன் என்பதை போல் நினைவில் வைத்திருப்பதை அவரது ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

                     

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், தோனியை கேப்டன் என்று போட்டதைப் போல், விராட் கோலியை இன்னும் பேட்ஸ்மேன் என்ற இடத்திலே வைத்துள்ளார். இதனால், விராட் கோலியின் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டார்கள். ‘டியர் பிசிசிஐ தற்போதைய கேப்டன் கிங் விராட் கோலி என்பதை தயவு கூர்ந்து ஞாபகத்திற்கு கொண்டு வாருங்கள். தோனி இல்லை கேப்டன். உங்களுடைய தவறை உடனடியாக சரிசெய்யுங்கள்’ என்று கொதித்துள்ளார்.   

                 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close