[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

இந்திய ஏ அணியில் ரஹானே, முரளி விஜய்!

rahane-vijay-to-play-against-english-lions

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இந்திய ஏ அணி பங்கேற்கும் அங்கீகாரமில்லாத டெஸ்ட் போட்டியில் ரஹானே, முரளி விஜய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 போட்டியில், தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இப்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது.

இந்தத் தொடரை அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடக்கிறது. ஒரு நாள் போட்டித் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அதில் குல்தீப், சேஹல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு, அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய், ரஹானே, புஜாரா ஆகி யோரும் அணிக்கு திரும்புகிறர்கள். 

இந்நிலையில், இந்திய ஏ கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்றது. வெஸ்ட் இண்டீஸ், இங்கி லாந்து லயன்ஸ் அணிகளுடனான தொடரை வென்று கோப்பையை கைப்பற்றிய இந்திய ஏ அணி, அங்கீகாரமில்லாத டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்றுள்ள இந்திய ஏ அணி, அடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்தப் போட்டி வொர்சஸ்டரில் இன்று தொடங்குகிறது.

இதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க இருக்கும், துணை கேப்டன் ரஹானே, தமிழக வீரர் முரளி விஜய் ஆகியோர் பங்கேற்கின்றனர். இங்கிலாந்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்த இந்தப் போட்டி அவர்களுக்குப் பயிற்சியாக அமையும். இதில் மேலும் சில டெஸ்ட் வீரர்களும் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே இங்கிலாந்து லயன்ஸ் அணி வலுவாக, மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் சர்வதேச போட்டியில் விளையாடும் அலைஸ்டர் குக், டேவிட் மலன், கிறிஸ் வோக்ஸ், டாம் பெஸ், ஜேக் லீக், சாம் குர்ரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close