[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

டி.என்.பி.எல் தொடரில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

sc-refuses-to-allow-other-state-players-in-tnpl

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு வருடமாக நடந்து வருகிறது. முதல் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன. மூன்றாவது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டி திருநெல்வேலி, சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில், ஒவ்வொரு அணியிலும் முதல்முறையாக வெளிமாநில வீரர்கள் 2 பேரைச் சேர்க்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதன் மனுவை இன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வெளிமாநில வீரர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close