[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

பந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' ! இம்முறை யாருக்கு ?

the-most-even-golden-glove-contest-in-world-cup-history

ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கியது முதல் போட்டியில் பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதுகின்றன.

ஜூலை 15 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பிரானஸூடன் மோதப் போவது யார் என இன்று தெரிந்திவிடும். உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், இப்போது விருதுக்கான இறுதிப் பட்டியலும் வேகமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. கோல் கீப்பர்களை கெளவரவிக்கும் வகையில்தான் ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் இறுதியில் "கோல்டன் கிளவ்" விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு அணியின் வெற்றி தோல்வியை முடிவு செய்வதே அந்ததந்த அணியின் கோல் கீப்பர்கள்தான். எனவே, கோல்டன் கிளவ் விருது முதலாவது உலகக் கோப்பை தொடரில் இருந்தே கொடுக்கப்பட்டு வருகிறது. சோவியத் யூனியனின் மறைந்த கோல் கீப்பர் லீவ் யசின் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக 1994 ஆம் ஆண்டு சிறந்த கோல் கீப்பர்களுக்கான யசின் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆனால் 2010 ஆம் ஆண்டு முதல் இவ்விருது கோல்டன் கிளவ் விருதாக பெயர் மாற்றப்பட்டது. மேலும் சிறந்த கோல் கீப்பர்கள் சிறந்த வீரர்களாகவும் தேர்வு செய்ய தகுதியுடையவர்கள் என்று பிஃபா குழு முடிவு செய்தது. இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஜேர்மனி அணியின் ஆலிவர் கான் சிறந்த கோல் கீப்பருக்கான "கோல்டன் கிளவ்" விருதினையும், சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதையும் வாங்கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்ட சாம்பியனான ஜெர்மனி அணியின் கோல் கீப்பர் ஆக இருந்த மெனுவள் நியோர் கோல்டன் கிளவ் விருதினை வென்றார்.  இந்தாண்டு குரோஷியாவின் சுபாஸிக் அல்லது இங்கிலாந்து அணியின் பிக்கார்டு கோல்டன் கிளவ் விருதினை வெல்லலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

"கோல்டன் கிளவ்" விருது பெற்றவர்கள்

1994 – மைக்கல் பெருட்ஹொம்மே (பெல்ஜியம்)

1998 – பெபியன் பார்தெஸ் (பிரான்ஸ்)

2002 – ஆலிவர் கான் (ஜேர்மனி)

2006 – கியன்லூகி புபன் (இத்தாலி)

2010 – ஐகர் கஸில்லாஸ் (ஸ்பெயின்)

2014 – மெனுவள் தியோர் (ஜேர்மனி)

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close