[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

pm-modi-congratulate-afghanistan-cricket-team

தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் இன்று விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ’ ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது கிரிக்கெட் அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை, இந்திய அணியுடன் விளையாட தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. இரண்டு அணிகளுக்கும் வாழ்த்துகள். விளையாட்டுகள் இருதரப்பு உறவை நெருக்கமாகவும் பலமாகவும் தொடர்ந்து மாற்றும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close