[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பதற்றமா? அப்படின்னா? ஆப்கான் கேப்டன் ஆச்சரியம்!

nerves-what-nerves-asghar-stanikzai

‘பதற்றமா, அப்படின்னா என்ன? என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் கேட்டார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் இன்று விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் போட்டி பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்து. 

இதில் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய், பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் கலந்துகொண்டனர். அப்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறீர்களே, பதற்றமாக இல்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டானிக்ஸாய், ‘பதற்றமா, அப்படின்னா? இப்பதான் முதன்முறையா இதைக் கேள்விப்படறேன்’ என்றார். பின்னர் பயிற்சியாள ஃபில் சிம்மன்ஸ் கேள்விகளுக்குப் பதில ளித்தார். 

அவர் கூறும்போது, ’அயர்லாந்து அணியில் நீண்ட காலம் பணியாற்றினேன். அங்கு கடந்த 5 ஆண்டுகளில் ஆப்கானில் உருவாக்கியது போல, இளம் வீரர்களை உருவாக்கவில்லை. பேட்டிங் கொஞ்சம் குறைவுதான். ஆனால் இந்தப் போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களையும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்திய அணியில் குல்தீப் யாதவ் போல எங்கள் அணியில் ஷாகிர் இருக்கிறார். அவரை எப்படி உருவாக்கினோம் என்று சொல்லமாட்டோம். அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம். அதே போல ரஷித்கான் சிறந்த ஸ்பின்னர். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் டெஸ்ட் போட்டியில் ஆடியதில்லை. இந்த போட்டியில் எப்படி செயல்படப்போகிறார் என்பது பார்க்க இருக்கி றோம். அவர் கண்டிப்பாக நன்றாக விளையாடுவார். விராத் போன்ற வீரர் இந்திய அணியில் இல்லாதது ஏமாற்றம்தான். ஆனாலும் நாங்கள் இதை எங்களுக்கு சாதகமாக பார்க்கிறோம். இந்தியாவை வீழ்த்தலாம், ஆனால் விராத்தை வீழ்த்த முடியாது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close