[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

‘சாம்பியன்’ ஏபி டிவில்லியர்ஸ் முடிவுக்கு வருந்திய வீரர்கள்

ab-de-villiers-retires-from-sachin-tendulkar-to-virender-sehwag-former-cricketers-hail-abd

தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஏபி டிவில்லியர்ஸ். உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், நேற்று தன்னுடைய ஒய்வு அறிவிப்பை  வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின்,  கங்குலி, ரெய்னா உட்பட்ட பலர் டிவில்லியர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். 

சச்சின் டெண்டுல்கர்:

                             

உங்கள் ஆன் பீல்ட் ஆட்டம் போல் களத்துக்கு வெளியேயும் 360 டிகிரி வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களை நிச்சயமாக மிஸ் பண்ணுவோம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் 

கங்குலி:

வெல்டன் ஏபி டிவில்லியர்ஸ்! கிரிக்கெட் உலகில் உங்களின் பங்களிப்புக்கு நன்றி. விளையாட்டு உலகம் உங்களை என்றும் மாறக்காது. நீங்கள்‘சாம்பியன்’வீரர்.

விவிஎஸ் லக்ஷ்மன்:

வாழ்த்துகள் ஏபி டிவில்லியர்ஸ். அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை. உங்களுடைய நேர்த்தியான கிரிக்கெட் திறமையாலும், உங்களின் நன்நடத்தையாலும் நீங்கள் தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்களுக்கு முன் உதாரணமாக இருப்பீர்கள். ஒய்வுக்கு பிறகான உங்களின் வாழ்கை மிகவும் சந்தோசமாக அமைய வாழ்த்துகள். 

சுரேஷ் ரெய்னா:

                               

கிரிக்கெட் உலகம் நிச்சயம் உங்களை மிஸ் பண்ணும் ஏபி டிவில்லியர்ஸ். இந்தியா முழுவதிலும் உங்களை நேசிக்கின்ற லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒய்வுக்கு பிறகான உங்களின் இரண்டாவது இன்னிங்ஸ் சந்தோசமாக அமையட்டும்.

ரோகித் சர்மா:

ஒய்வுக்கு பிறகான உங்களின் வாழ்கைக்கு வாழ்த்துகள். உங்களின் விளையாட்டை போலவே உங்களின் வாழ்கையும் உற்சாகமாக அமையும் என நம்புகிறேன்.

ஷாகித் அப்ரீடி: 

நான் மிகவும் போற்றும் விக்கெட்டில் உங்களை வீழ்த்தியதும் ஒன்று. பெரும்பாலான நேரங்களில் உங்களை வீழ்த்துவது சவால்தான். ஆச்சரியகரமான உங்கள் கிரிக்கெட்டுக்கு வாழ்த்துகள். 
 
மகேலா ஜெயவர்தனே:

வாழ்த்துகள் ஏபி டிவில்லியர்ஸ் சிறந்தவர்களில் ஒருவர் நீங்கள். அபாரமான வீரர், அனைத்திற்கும் மேலாக மிகச்சிறந்த நபர்.

மார்க் பவுச்சர்:

                    

தென் ஆப்பிரிக்காவுக்காக இவர் முதலில் வந்த நாள் நினைவில் உள்ளது. என்ன ஒரு அகத்தூண்டுதல்? வீரர் இவர்!! நாட்டுக்காக, சக வீரர்களுக்காக, ரசிகர்களுக்காக நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி.

ஜாக் காலிஸ்:

உங்களின் கிரிக்கெட் வாழ்கைக்கு வாழ்த்துகள். ஒய்வுக்கு பிறகான நேரங்களில் உங்களின் குடும்பத்தோடு நேரத்தை செலவழியுங்கள். உங்களை இளைஞனாக பார்த்து இருக்கிறேன். இன்று உலக கிரிக்கெட்டின் மிக முக்கிய நபர். 

கெவின் பீட்டர்சன்:

ஏபி டிவில்லியர்ஸ் ஒய்வு குறித்து இப்போதுதான் பார்த்தேன். நம்ப முடியாத உங்களின் கிரிக்கெட் வாழ்கைக்கு நன்றி.

இப்படி லட்சகணக்கான அவருடைய ரசிகர்கள்  சமூகவலைத்தளங்களில் வாழ்த்தையும், வருத்தத்தையும் ஒருங்கே பதிவு செய்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close