[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

தொடரும் டெத் ஓவர் ஜுரம்: பஞ்சாப்பை பந்தாடுமா சிஎஸ்கே?

csk-look-to-work-on-problem-areas

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று மோதுகின்றன கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், சென்னை சூப்பர் கிங்ஸூம்!

பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே சென்றுவிட்டதால் சிஎஸ்கே, இன்றைய ஆட்டத்தில் அதிகம் அலட்டிக்கொள்ளாது. இருந்தாலும் டாப் 2 இடத்தை உறுதி செய்வதற்கு இந்த வெற்றி முக்கியம். 

இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்ததற்காக (652ரன்கள்) ஆரஞ்சுத் தொப்பியை (நேற்றைய போட்டியில் அந்த தொப்பி, கனே வில்லியம்சனுக்கு (661 ரன்கள்) சென்றது) கைப்பற்றிய கே.எல் ராகுலும் அதிக விக்கெட் (24) வீழ்த்தியதற்காக பர்பிள் தொப்பியை கைப்பற்றியிருக்கும் ஆண்ட்ரு டையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த அணி, பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல தடுமாறிக் கொண்டிருப்பது வேடிக்கைதான்! 

இவர்களை தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவதால், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்துக்கு தள்ளப் பட்டிருக் கிறது பஞ்சாப். கடந்த 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி, மிடில் ஆர்டரில் மிரண்டு போவது ஆச்சரியம்.

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இரண்டு போட்டிகளில் தன்னைக் காட்டினார், பந்துகளை விளாசி. பின்னர் அவர் அடங்கிவிட்டார். யுவராஜ் சிங், பந்துகளை புதிதாகப் பார்ப்பது போல வருவதும் போவதுமாக இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் கலக்கிய கருண்நாயரும் மயங்க் அகர்வாலும் இந்தத் தொடரில் சரியான இன்னிங்ஸை வெளிப்படுத்தவில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத அவர்களின் மேஜிக் ஸ்பின்னர் முஜிப் இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிரடி காண்பித்தால் பஞ்சாப் வெல்ல வாய்ப்பிருக்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டதால் இந்தப் போட்டியில் சில சோதனை முயற்சிகளை மேற் கொள்ளலாம். ஓபனிங்கில் வாட்சனும் ராயுடுவும் சிறப்பாக ஆடி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா சில போட்டிகளில் அதிரடி காட்டினாலும் அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. மிடில் ஆர்டர், பயங்கர தடுமாற்றத்தில் இருக்கிறது.

சாம் பில்லிங்ஸ், ஜடேஜா, பிராவோ ஆகியோர் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளாசினார்கள். தோனி, நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். இதனால் இன்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் சில மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது. பந்துவீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், நிகிடி ஆகியோர் கடந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். சிஎஸ்கே சுழல் எடுபடவில்லை. ஹர்பஜன் சிங் பந்தில் சிக்சரும் பவுண்டரிகளும் பறக்கின்றன. கூடவே, டெத் ஓவர் ஜூரம். சிஎஸ்கேவை வாட்டி வதைக்கிறது. 

கடந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நிகிடிக்கும் தீபக் சாஹருக்கும் ஒரு ஓவர் மிச்சமிருக்கும்போது, கடைசி ஓவரை பிராவோவிடம் கொடுத்தார் தோனி. அவர் அந்த ஓவரில் ரன்களை தாராளமாக கொடுத்தார். தோனியின் இந்த முடிவு விமர்சனத்துக்குள்ளானது. இதனால் இன்றைய போட்டியில் டெத் ஓவரில் மாற்றம் இருக்கும்.

போட்டி இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close