[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது

அதற்காக வருத்தப்பட்டார் பொல்லார்ட்: ரோகித் சர்மா

pollard-was-very-upset-when-he-was-left-out-rohit-sharma

'பொல்லார்ட் எப்போதும் எங்கள் அணிக்கு மேட்ச் வின்னராக இருந்துகொண்டிருக்கிறார்' என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -மும்பை அணிகள் மோதின.  மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், மும்பை அணியில் டுமினிக்கு பதிலாக பொல்லார்ட் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் கருண் நாயர், மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு யுவராஜ்சிங், மனோஜ் திவாரி இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் சூர்யகுமார் யாதவும், லெவிஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். லெவிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆண்ட்ரூ டையின் அடுத்தடுத்த பந்துகளில் இஷான் கிஷான் 20 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 27 ரன்களில் வீழ்ந்தனர். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் வழக்கம் போல நடையை கட்டினார். இதனால் மும்பை அணி தடுமாறியது. பின்னர் வந்த பொல்லார்ட், தன்னை கடந்த போட்டிகளில் உட்கார வைத்ததற்கான கோபத்தை பேட்டில் காட்டினார். பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த அவர் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

குணால் பாண்ட்யா 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் 18 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். லோகேஷ் ராகுலும், ஆரோன் பின்சும்  அணியை தூக்கி நிறுத்தினர். அபாரமாக ஆடிய ராகுல் நடப்பு தொடரில் தனது 6-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 16 ஓவர்களில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்களுடன் வெற்றி வாய்ப்பில் இருந்தது.

17-வது ஓவரை வீசிய பும்ரா, ஆரோன் பின்ச் (46 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (1) விக்கெட்டுகளை வீழ்த்த, ஆட்டம் கைமாறியது. 18-வது ஓவரில் பென் கட்டிங் 15 ரன் வழங்கினாலும், 19-வது ஓவரை மறுபடியும் வீச வந்த பும்ரா, கட்டுக்கோப்பாக வீசி அமர்க்களப்படுத்தினார். லோகேஷ் ராகுல் 60 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அவுட் ஆனதும் வெற்றி மும்பை பக்கம் திரும்பியது.

கடைசி ஓவரில், வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய மெக்லனஹான், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே-ஆப் சுற்றை தக்கவைத்துக் கொண்டது. பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு மங்கிவிட்டது. 

வெற்றிக்குப் பின் பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா ’ இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி. என்னவெல்லாம் எதிர்பார்த்தோமோ, அதை எங்கள் வீரர்கள் செய்து முடித்தார்கள். அது எளிதானதும் அல்ல. இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதும் இங்கு அதிக ஸ்கோர் எடுக்க முடியும் என்பதும் தெரியும். இருந்தும் மிடிலில் நாங்கள் தடுமாறிவிட்டோம். பொல்லார்ட் எப்போதும் எங்கள் அணிக்கு மேட்ச் வின்னராக இருந்துகொண்டிருக்கிறார். கடந்த சில போட்டிகளில் அவரை விட்டுவிட்டு விளையாடினோம். அது எப்போதும் கடினமான முடிவுதான். ஆடும் லெவனில் அவர் சேர்க்கப்படாததற்கு வருத்தப்பட்டார் அவர். டுமினி கடைசிக்கட்ட ஓவர்களில் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாததால் பொல்லார்டுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க நினைத்தோம். அவர் அழுத்தமான சூழ்நிலைகளில் எப்போதும் நன்றாக ஆடக்கூடியவர். அதை அவர் சரியாகவே செய்தார். பந்துவீச்சாளர் பும்ரா, கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டுவருகிறார். அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவர் இந்தப் போட்டியில் விக்கெட் வீத்தியது எளிதான விஷயம் இல்லை. பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டு பந்துவீசினார்’

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close