[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

தூண்டியிருக்குமா தோனி விமர்சனம்? சென்னை- ஐதராபாத் இன்று மீண்டும் மோதல்!

will-dhoni-s-criticism-fire-up-csk-bowlers

கடந்த மாதம் இதே போன்ற ஒரு ஞாயிறுக்கிழமைதான் ஐதராபாத்- சென்னை அணிகள் மோதிய போட்டி நடந்தது. அப்போதும் மாலை 4 மணிக்குத்தான் தொடங்கியது போட்டி. அந்தப் போட்டியில் வெளுத்து வாங்கினார் ராயுடு. 4 சிக்சர், 9 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 79 ரன் எடுத்து தேவையில்லாத ரன் அவுட்டில் பலியானார். இதேப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் விளாச, சிஎஸ்கே 182 ரன்கள் குவித்தது. 

கூக்ளி மற்றும் சுழலில் மிரட்டும் ஐதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ரஷித் கான் பந்தை பிரித்து மேய்ந்தார்கள் ராயுடுவும் ரெய்னாவும். ரஷித் 4 ஓவர்களில் 49 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு கட்டத்தில் நொந்தே போய்விட்டார். 

பின்னர் ஆடிய ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு நெருங்கி வந்தார். கடைசி ஓவரில் ரஷித்கான் இரண்டு சிக்சர்களை பறக்க விட பற்றிக்கொண்டது பதட்டம். ஆனாலும் 4 ரன்னில் தோற்றது, அந்த அணி. இதே பதற்றம் இன்றைய போட்டியிலும் இருக்கும் என்கிறார்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 46 வது லீக் போட்டியில் இன்று மீண்டும் மோதுகின்றன இந்த அணிகள். புனேவில் நடக்கும் இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு எளிதாகச் சென்றுவிடும் என்பதால் வெற்றிக்குத் தீவிரம் காட்டும். 

ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய சிஎஸ்கே, மோசமான பந்துவீச்சு மற்றும் கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டு தோற்றது. போட்டிக்குப் பின் பேசிய தோனி, பந்துவீச்சாளர்களை குறை சொன்னார். சொன்னதை கூட செயல்படுத்த மறுக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டார். இதற்கு முன்னும் ஒரு போட்டியில் பந்துவீச்சாளர்களை திட்டித் தீர்த்தார். கூல் கேப்டன் தோனியை இப்படி ஹாட் ஆக்கிய பந்துவீச்சாளர்கள் இன்றைய போட்டியில் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம். ஏனென்றால் அவரது பேச்சு அவர்களைத் தூண்டியிருக்கும்.

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தீபக் சாஹர் இன்று அணியில் இடம் பிடிக்கலாம். அவர் அணிக்குள் வந்தால் டேவிட் வில்லி உட்கார வைக்கப்படலாம். கடந்த போட்டியில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத லுங்கி நிகிடி இன்று இறங்குவார். பேட்டிங்கில் வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி சிறப்பான ஃபார்மில் உள்ளனர். இருந்தும் மிடில் ஆர்டரில் அதிக ரன்கள் குவிக்க சிரமப்படுகின்றனர். கடந்த சில போட்டிகளில் ரன் குவிக்க தடுமாறிய சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு டுபிளிசிஸ் இன்று களமிறங்கலாம். இவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் சிஎஸ்கே இன்று வெற்றி பெறுவது நிச்சயம். 

ஐதராபாத் அணி, பந்து வீச்சில் மிரட்டுகிறது. அந்த அணியின் சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார் சிறப்பாக வீசி வருகின்றனர். சுழலில், ரஷித், ஷகிப் அல் ஹசன் மிரட்டுகிறார்கள். பேட்டிங்கில் முதலில் தடுமாறிவந்த அந்த அணி, இப்போது அதிலும் ஸ்ட்ராங்காகி விட்டது. ஷிகர் தவன், ஹேல்ஸ், வில்லியம்சன் ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும். 

ஏற்கனவே, புனேவில் நடந்த போட்டியை காண சென்னையில் இருந்து ’விசில் போடு எக்ஸ்பிரஸி’ல் ரசிகர்கள் அங்கு சென்றனர். இன்றைய போட்டியை காணவும் அவர்கள் தனி ரயிலில் சென்றுள்ளனர். இதனால் புனேவில் ’மஞ்சள்’ ஆதிக்கத்தைப் பார்க்கலாம்!
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close