[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

அப்படியும் சொல்வாங்க, இப்படியும் சொல்வாங்க: தினேஷ் கார்த்திக்

india-wary-of-bangladesh-s-tenacity-karthik

பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிடவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, ‘இந்தியா ஒரு கிரிக்கெட் தேசம் என்பதால் முதல் தர அணியோ, இரண்டாம் தர அணியோ, வெற்றிதான் முக்கியம். பங்களாதேஷ் அணியை சாதாரணமாக எடை போட முடியாது. துணை கண்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கடினமாக முயற்சி செய்கிறார்கள். அதனால் அதை குறைத்து மதிப்பிடவில்லை. பங்களாதேஷுடன் விளையாடி, வெற்றிப் பெற்றால், ‘ஓகே, பங்களாதேஷுக்கு எதிரா வெற்றி பெற்றிருக்கீங்க’ என்பார்கள். தோற்றால், ‘என்ன செய்றீங்க, பங்களாதேஷ்கிட்டயே தோத்துட்டீங்க? ’ என்பார்கள். அப்படியும் சொல்வார்கள், இப்படியும் சொல்வார்கள்.

கேப்டன் ரோகித் சர்மா ‘சில முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் கடந்த ஒரு வருடமாக எப்படி விளையாடி வருகிறோமோ, அப்படியே ஆட்டத்தைத் தொடர வேண்டும்’ என்றார். ஒவ்வொரு போட்டியையும் வெல்லவேண்டும் என்று நினைத்தே ஆடுகிறோம். இந்தப் போட்டியும் அப்படித்தான். பங்களாதேஷுக்கு எதிரான முந்தைய போட்டியில் எங்கள் ஃபீல்டிங் சரியாக அமையவில்லை. சில கேட்ச்களை கோட்டை விட்டோம். இந்தப் போட்டியில் அந்த தவறுகள் இல்லாமல் செயல்படுவோம்.

சர்வதேச கிரிக்கெட்டின்போது, ரசிகர்களின் ஆரவாரத்துக்குப் பழகி இருப்போம். அது ஃபீல்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆடவில்லை என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் அதிகளவில் கலந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு இந்தப் போட்டியில் ஆர்வம் அதிகம் இருக்காது. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நமக்கென்று நிர்ணயித்துக் கொண்ட தரத்திலிருந்து விலகிவிடக் கூடாது என்று பீல்டிங் பயிற்சியாளர் கூறியிருக்கிறார். அதை புரிந்திருக்கிறோம்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close