[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

விஜய் ஹசாரே போட்டி: ’ஜூனியர் கோலி’ அபார சதம்!

shubman-gill-hits-ton-as-punjab-beat-karnataka-in-a-thriller

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் விளையாடும் ’ஜூனியர் கோலி’ எனப்படும் சுப்மான் கில் அபார சதம் அடித்தார். 

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பஞ்சாப்-கர்நாடகா அணிகள் மோதின. 

மழையால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. ’ஜூனியர் கோலி’ என்று அழைக்கப்படும் சுப்மான் கில் 123 ரன்களும் (122 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் யுவராஜ் சிங் 36 ரன்களும் எடுத்தனர். சமீபத்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், கில் தொடர் நாயகன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணியால் 265 ரன்களே எடுக்க முடிந்தது. கே.எல்.ராகுல், 107 ரன்கள் (91 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்தும் பலன் இல்லாமல் போனது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close