[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

4-வது போட்டியில் இந்திய அணி செய்த 2 தவறுகள்!

why-india-lost-4th-odi-at-johannesburg

தென்னாப்பிரிக்காவுடனான நான்காவது ஒரு நாள் போட்டியில் தோற்றதற்கு இந்திய கிரிக்கெட் அணி செய்த இரண்டு தவறுகளே முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன் தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய தவான் சதம் அடித்தார். விராத் கோலி 75 ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 7.2 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 43 ரன் எடுத்திருந்த போது மழை றுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. பின் 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என டக்வொர்த் லூவிஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. முடிவில் தென்னாப்பிரிக்க அணி 25. 3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணி செய்த பல தவறுகளே தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று ஷிகர் தவான் கூறியுள்ளார். 

டிவில்லியர்ஸ் அவுட் ஆன பிறகு, தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 102 ரன்களுடன் (16.5 ஓவர்) சிக்கலில் தவித்தது. பின்னர் டேவிட் மில்லர் 6 ரன்னில் இருந்த போது அவுட்டில் இருந்து தப்பினார். சேஹலின் பந்து வீச்சில் அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை, ஸ்ரேயாஸ் ஐயர் கோட்டை விட்டார். அடுத்த 3-வது பந்தில் போல்ட் ஆனார். ரீப்ளேயில் பார்த்தபோது சேஹல் வீசியது நோ-பால் என தெரிய வந்தது. இரண்டு முறை தப்பிய தப்பிய மில்லர், அடுத்து பாண்ட்யாவின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். விக்கெட் கீப்பர்  கிளாசனும் ஒத்துழைப்பு கொடுக்க, அந்த அணி சரிவில் இருந்து மீண்டது.


இது பற்றி தவான் கூறும்போது, ‘மில்லர் கேட்ச்சை நழுவ விட்டதும், பிறகு போல்டு ஆன போது அது நோ-பால் ஆனதும் தோல்விக்கு முக்கிய காரணம். அதில் இருந்து தான் ஆட்டத்தின் போக்கு மாறியது. பொதுவாக எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவதில்லை. கிடைத்த வாய்ப்பை மில்லர் பயன்படுத்திக் கொண்டார். அதிரடியாக விளையாடி, ஆட்டத்தை தங்கள் அணி பக்கம் திருப்பினார்’ என்றார்.
இந்த தவறுகளை சரி செய்திருந்தால் நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வென்றி பெற்று, தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றியிருக்கும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close