[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

டெல்லியின் புதிய பவுலிங் கோச்சாகிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்!

ipl-2018-delhi-daredevils-name-former-australia-all-rounder-james-hopes-as-new-bowling-coach

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிக்கான ஏலங்கள் நிறைவடைந்து, அனைத்து அணிகளும் தங்கள் அடுத்தகட்ட பணிகளை தொடங்கியுள்ளன. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணி பயிற்சியாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே பயிற்சியாளர்கள் தேர்வு பணியை தொடங்கிய டெல்லி அணி, ராகுல் டிராவிட்டை அணியின் பயிற்சியாளராக நியமிக்க விரும்பியது. ஆனால் அவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக உள்ளதால், டெல்லி அணிக்கு பயிற்சியாளராக தேர்வாக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டிராவிட்டை அணியின் ஆலோசகராக நியமித்த டெல்லி அணி, பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது.

இந்நிலையில் டெல்லி அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை டெல்லி அணியின் சிஇஓ ஹேமந்த் டுவா உறுதி செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் சுமார் 15 வருட அனுபவமுடைய ஜேம்ஸ், 84 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியை பொறுத்தவரையில் டெல்லி உட்பட மூன்று அணிகளில் இவர் விளையாடியுள்ளார். இவரை தவிர, முன்னாள் அஸ்ஸாம் அணியின் ரயில்வே கிரிக்கெட்டர் சுபாதீப் கோஸ் டெல்லி அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமணம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close