[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

ஸ்கூல் சிறுவர்கள் போல ரன் அவுட்: ரவி சாஸ்திரி வேதனை

ravi-shastri-exposes-why-india-failed-in-tests-vs-south-africa

தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்கூல் சிறுவர்கள் போல இந்திய வீரர்கள் ரன் அவுட் ஆனதை தாங்க முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்த இரு போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘வீரர்களின் சமீபத்திய ஃபார்மை வைத்துதான் ஆடும் லெவனுக்கு தேர்வு செய்கிறோம். ரஹானேவுக்கு பதில் ரோகித் சர்மாவை தேர்வு செய்தது அப்படித்தான். ரஹானேவை சேர்த்து அவர் சரியாக ஆடியிருக்கவில்லை என்றால், ரோகித்தை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டிருப்பார்கள். தென்னாப்பிரிக்கச் சூழ்நிலை நமக்கு முழுமையாக தெரியாது. அதனால் போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பே இங்கு வந்து பயிற்சி எடுத்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். 2 டெஸ்டிலும் நாம் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றினோம். 2 டெஸ்டிலும் வெற்றி வாய்ப்பு இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறலாம். பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் சாய்ப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இது நல்ல அறிகுறி. 2-வது டெஸ்ட் போட்டியில் நமது வீரர்கள் சிலர் ரன் அவுட் ஆன முறை பள்ளி சிறுவர்கள் செய்வது போல இருந்தது. இது வேதனை அளித்தது. இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்’ என்றார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close