[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்

நான் நல்லா விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ்தான் காரணம்:சுரேஷ் ரெய்னா

i-became-a-real-cricketer-at-csk-says-suresh-raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதே, சிறந்த கிரிக்கெட் வீரராக தாம் உருவாக காரணம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இப்போது நடந்து வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதின. இதில் உத்தரபிரதேச அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, அபார சதமடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார். 

இதன் மூலம் டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டி20 போட்டியில் தமிழக வீரர் முரளி விஜய், 2010-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 127 ரன்கள் அடித்ததே இந்திய வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது. 

போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் ரெய்னா, ’இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் அடித்து ஆட முடிந்தது. இந்த சதத்தின் மூலம் மீண்டும் பாஃர்முக்கு திரும்பியிருப்பதில் மகிழ்ச்சி. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் நான் இடம்பிடித்திருப்பது பெருமையாக இருக்கிறது. அந்த அணியில் இருந்தபோதுதான் எனது ஆட்டத்திறனை மேம்படுத்தினேன். சென்னை அணிக்காக ஆடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது பற்றி கேட்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறேன். இது போன்ற ஆட்டம் தொடர்ந்தால் ஆசிய கோப்பை போட்டியில் எனக்கும் இடம் கிடைக்கும் என கருதுகிறேன். யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெறாதது பற்றி கேட்கிறார்கள். அதனால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இருந்தும் அந்த தேர்வில் வெற்றி பெற எனக்கு அவகாசம் தந்தார்கள். பிறகு நான் அதில் தேர்ச்சி பெற்றேன்’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close